Thursday, May 9, 2013

ரஜினிக்கு வயதாகிவிட்டதால் ஜடேஜாவை படைத்தார் கடவுள்: டோனி

Source: http://www.lankasrisports.com/view.php?2207DmAYebcb4eWAA2d4e06Q04Ye2034JlOAmaddecSOldTc203Am40oa2e4cc4MCQdcb0dOmD1f42

 

ரஜினிக்கு வயதாகிவிட்டதால் ஜடேஜாவை படைத்தார் கடவுள்: டோனி

[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 01:21.55 பி. GMT ]

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வயதாகிவிட்டது என்று உணர்ந்த கடவுள் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார் என்று தனது ரசிகர்கள் டுவீட் செய்ததை கிரிக்கெட் வீரர் டோனி ரீடுவீட் செய்துள்ளார்.

.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் 'சர்' பட்டம் கொடுத்துள்ளனர்.

மேலும் அவரைப் பற்றி பல ஜோக்குகள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் உலா வருகின்றது. இந்நிலையில் சென்னை அணியின் அணித்தலைவர் டோனி தனது ரசிகர்கள் டுவிட்டரில் ஜடேஜாவை பற்றி தெரிவித்துள்ளதை ரீடுவீட் செய்துள்ளார்.

சில டிவிட்டுகள்:

டிவிட்டரே ஜடேஜாவை ஃபாலோ செய்கிறது.

ரஜினி சாருக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்ந்த கடவுள் சர் ரவீந்திர ஜடேஜாவை படைத்தார்.

பயிற்சிக்காக மதியம் 3 மணிக்கு கிளம்பினால் சர் ஜடேஜா பயிற்சி பெற மைதானமே அவரைத் தேடி வருகிறது.

சர் ஜடேஜா பந்தை பிடிக்க செல்லத் தேவையில்லை பந்தே அவரது கையில் வந்து சேரும்.

சர் ஜடேஜா ஜீப் ஓட்டினால் அது ஓடாது ரோடு ஓடும்.

 

 

This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient(s), please reply to the sender and destroy all copies of the original message. Any unauthorized review, use, disclosure, dissemination, forwarding, printing or copying of this email, and/or any action taken in reliance on the contents of this e-mail is strictly prohibited and may be unlawful.
Post a Comment